Friday, November 7, 2014

HC says ‘no’ to folding case bundles

HC says ‘no’ to folding case bundles

MADURAI, November 5, 2014

MOHAMED IMRANULLAH S.

MMBA, however, expressed reservations over other stipulations prescribed by court administration

The new system will come into effect for all types of cases from Monday in the Principal Seat 

A trolley that has been introduced in the Madras High Court Bench in Madurai for carrying case bundles to and from court halls on a daily basis.
A la apex court:It is expected that once flat filing system is in place, case bundles need not be piled up like this, as seen in the verandah of a building of Madras High Court Bench in Madurai

The age-old way of filing and maintaining case bundles, by folding legal size (216 X 279 mm) papers vertically and tying them up with white strings, is all set to change at the Principal Seat of the Madras High Court in Chennai as well as its Madurai Bench, with the court administration deciding to introduce ‘flat filing system.’

According to a circular issued by the High Court Registrar General P. Kalaiyarasan, the new system, which requires lawyers to file their cases in flat papers, without folding them, has come into effect with respect to all types of cases from Monday in the Principal Seat as agreed by the office-bearers of all the bar associations in Chennai.

Welcoming the move, Isaac Mohanlal, president, Madurai Bench of Madras High Court Bar Association (MMBA), said the system was in vogue in the Supreme Court. Flat filing would prevent documents from tearing and also free the court officers of the burden of straightening every folded bundle before presenting them to judges in court halls.

He, however, expressed reservations over other stipulations prescribed by the court administration while introducing the flat filing system. He said that the lawyers here were not agreeable to the condition that they should file English translation of every other vernacular language document filed to support a case since the process would be time- consuming and expensive.

“We also said ‘no’ to filing as many affidavits and typed set of papers [supporting documents] as there were respondents in a case because many a time one government counsel would represent two or three officers included as respondents. In such cases, filing many copies of affidavits and other documents would only make the case bundle bulky,” he reasoned.

The third stipulation, opposed by the Bar, was compulsory quoting of provisions of law under which every case was filed. Lawyers contended that it would not be possible to quote exact provisions of law in cases which were filed on the ground of deprivation of constitutional rights, he said.

“But for these issues, we have no objection to the introduction of the flat filing system. It is a wonderful system that will help judges in knowing the day-to-day development of the case by glancing through the first few pages itself. It will also bring in accountability among government officials since they cannot file any document in the court without specific pleadings, with respect to the document, in their counter affidavits,” Mr. Mohanlal noted.


Also read the related Notification issued by Hon'ble Madras High Court

NOTIFICATION No.372 of 2014, dated 29-10-2014 

As agreed upon by the various Advocates Associations with the Hon’ble Committee Judges in the meeting held on 2nd April, 2013, the “Flat Filing System” in the High Court of Madras, both in the Principal Seat at Madras, as well as in the Madurai Bench was introduced with effect from 03.06.2013 by High Court’s Notification No.140/2013 dated 26.04.2013 in respect of Writ Appeals, to start with.

In the meeting held on 23rd September, 2014 with the Hon’ble Committee Judges, the Office Bearers of Madras Bar Association, Madras High Court Advocates Association and Women Lawyers Association have unanimously agreed for introduction of the “Flat Filing System” in respect of all types of cases.

In furtherance to the adoption of “Flat Filing System” as agreed upon as above, the same is introduced in respect of all types of cases w.e.f. 03/11/2014. The learned Advocates are requested to file the cases in “Flat Files” accordingly.


Also read the related stories

உயர் நீதிமன்றத்தில் மனுக்களை மடித்து தாக்கல் செய்யும் பழங்கால நடைமுறைக்கு முற்றுப்புள்ளி: ‘பிளாட் பைலிங் சிஸ்டம்’ அறிமுகம்!

Published: November 7, 2014 10:07 IST

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களை செங்குத்தாக மடித்து தாக்கல் செய்யும் பழங்கால நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மனுக்களை மடிக்காமல் அப்படியே சமதளமாக (பிளாட்) தாக்கல் செய்யும்முறை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக நீதிமன்றங்களில் விசாரணைக்காக தாக்கல் செய்யப்படும் மனுக்கள், 216க்கு 279 எம்எம் அளவுள்ள தாள்களில் வழக்கு விவரம் அச்சிடப்பட்டு தாக்கல் செய்யப்படுகின்றன. மனுக்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, மொத்தத் தாளையும் செங்குத்தாக இரண்டாக மடித்து தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நடைமுறை சென்னை உயர் நீதிமன்றம் செயல்பட ஆரம்பித்த நாளிலிருந்தே 150 ஆண்டுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகத்தில் உள்ள பிற நீதிமன்றங்களிலும் இந்த முறை தான் அமலில் உள்ளது.

ஒரு வழக்கு முடிய நீண்டநாள்கள் ஆகும்போது அந்த மனுக்களை மடித்து வைத்திருந்தபடியே பாதுகாக்க வேண்டியது உள்ளது. அவ்வாறு ஒரு மனு மாதக்கணக்கில் மடிந்தபடியே இருக்கும்போது மனு சிதிலமடைந்து அதிலுள்ள எழுத்துகள் அழியும் நிலை ஏற்படுகிறது. மேலும், அந்த மனு விசாரணைக்கு வரும்போது நீதிபதிகள் அதனை பிரித்து பார்த்து அதிலுள்ள விஷயங்களை படித்து தெரிந்து கொள்வதிலும் சிரமம் உள்ளது.

இந்த சிரமங்களுக்கு விடைகொடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம், டெல்லி, மும்பை உட்பட பல்வேறு உயர் நீதிமன்றங்களில் மனுக்களை மடிக்காமல் தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதேபோன்று தமிழக நீதிமன்றங்களிலும் மனுக்களை மடிக்காமல் அப்படியே தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் தரப்பில் 2013-ல் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையேற்று முதல்கட்டமாக ரிட் மேல்முறையீடு மனுக்களை மட்டும் மடிக்காமல் அப்படியே தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வசதி அனைத்து வகை மனுக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் கலையரசன் விடுத்துள்ள அறிக்கையில், “அனைத்து வகை மனுக்களும் மடிக்காமல் அப்படியே தாக்கல் செய்வதற்கு நவ. 3 முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களை பிளாட் பைலிங் சிஸ்டம் முறையில் மடிக்காமல் தாக்கல் செய்யலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் எழுத்தர் பொதுநல நிதியத்தின் உறுப்பினர் எஸ்.பாண்டி கூறும்போது, இரண்டாவது அப்பீல் மனுவாக இருந்தால் 300 முதல் 400 பக்கங்கள் வரை இருக்கும். அவற்றை மடித்து தாக்கல் செய்வது சிரமமான ஒன்று. 

அந்த மனுவை மடித்தவாறு ஆவணக் காப்பகத்தில் அடுக்கிவைப்பதிலும் சிரமம் உள்ளது. மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் அந்த மனுக்கள் அப்படியே வைத்திருந்து பிரிக்கும்போது கிழிந்துபோகின்றன. 

எனவே, மனுக்களை மடிக்காமல் தாக்கல் செய்யும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. மனுக்களை மடிக்காமல் ஸ்பைரல் பைண்டிங் முறையில் தாக்கல் செய்யும்முறை உச்ச நீதிமன்றம், பல உயர் நீதிமன்றங்களில் அமலில் உள்ளது. தற்போது இங்கும் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.


Also read the related stories

வழக்கு தொடர்வதற்கு ஐகோர்ட்டில் புதிய விதிமுறைகள்

பதிவு செய்த நாள்: மே 05, 2013 03:01

சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடர்வதற்கான புதிய விதிமுறைகள், ஜூன், 3ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஐகோர்ட்டில், வழக்கு தொடர்வதற்கான புதிய விதிமுறைகள், 2002ம் ஆண்டு வகுக்கப்பட்டு, அரசு "கெஜட்'டிலும் வெளியிடப்பட்டது. பின், விதிமுறைகளை, ஐகோர்ட் நிறுத்தி வைத்தது. தற்போது, அதே விதிமுறைகள் மீண்டும் கொண்டு வரப்பட உள்ளது. கோடை விடுமுறைக்குப் பின், ஜூன், 3ம் தேதி முதல், இந்தப் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகிறது.

"ரிட்' மனு, இடைக்கால மனு, மறு ஆய்வு மனு, எப்படி இருக்க வேண்டும் என, புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. "ரிட்' மனுவில், மனுதாரரின் பெயர், விவரங்கள், எதிர் மனுதாரர்களின் முழு முகவரி, கோரப்படும் நிவாரணம், அடங்கியிருக்க வேண்டும். ஒரே ஒரு நிவாரணம் தான் கோரப்பட வேண்டும். அதே நேரத்தில், அந்த நிவாரணத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம்.

மனு தாக்கல் செய்யும் வழக்கறிஞர் பெயர், பார் கவுன்சிலின் பதிவு எண், இடம் பெற வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இருந்தால், ஒவ்வொருவரின் பதிவு எண்ணையும் குறிப்பிட வேண்டும்.

ரிட் மனுவோடு சேர்த்து தாக்கல் செய்யப்படும், பிரமாண மனுவில் (அபிடவிட்), உத்தரவாதம் அளிப்பவரின் பெயர், தந்தை பெயர், வயது, மதம், தொழில், வசிக்கும் இடம், இடம் பெற வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் இருந்தால், ஒவ்வொரு பக்கத்தின் கீழ் பகுதியில், உத்தரவாதம் அளிப்பவரின் கையெழுத்து இருக்க வேண்டும்.

பிரமாண மனு, அதற்கான பதில் மனு, பதிலுக்கு பதில் மனு ஆகியவற்றை, வழக்கறிஞரோ, நோட்டரி வழக்கறிஞரோ, உறுதிமொழி கமிஷனரோ, "அட்டெஸ்ட்' (சரியானது என்பதை உறுதி செய்வது) செய்ய வேண்டும். இவ்வாறு, "அட்டெஸ்ட்' செய்பவரின் பெயர், அவரது கையெழுத்து, பார் கவுன்சிலில் அவரது பதிவு எண், வசிப்பிட முகவரி இடம் பெற வேண்டும்.

ஆட்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்ப்பஸ்) தாக்கல் செய்யும் போது, மனுதாரரின் பெயருக்கு முன், வலது ஓரத்தில், காவலில் வைக்கப்பட்டவரின் பெயர், தந்தை பெயர், வயது, நிரந்தர முகவரி, அடையாள குறியீடு, காவலில் வைக்கப்பட்ட தேதி, காவல் உத்தரவின் பார்வை எண், எந்த சிறை, ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

ஒவ்வொரு மனுவும், புத்தக வடிவில் தாக்கல் செய்யப்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில், இந்த நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது. தற்போது, மனுவை மடித்து தாக்கல் செய்யும் வழக்கம் உள்ளது. புதிய முறைப்படி, மனுவை மடிக்க வேண்டியதில்லை.

முத்திரை வில்லை ஒட்டப்பட்டு, "அட்டெஸ்ட்' செய்த "வக்காலத்து' படிவம், தாக்கல் செய்யும் வழக்கறிஞரின் கையெழுத்து உள்ள மனு, அசல் உத்தரவு, வேறு மொழியில் உத்தரவு இருந்தால், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள நகல், மொழிபெயர்ப்பு சரி தான் என்பதை உறுதி செய்ய, வழக்கறிஞரின் சான்றொப்பம், இடைக்கால மனுக்கள், அபிடவிட், ஆவணங்கள், இவை அனைத்தையும் வரிசையாக வைத்து, தைத்து, ஒவ்வொரு பக்கத்துக்கும் எண் இட்டு, புத்தக வடிவில், ஒவ்வொரு ரிட் மனுவும் இருக்க வேண்டும்.

"பேப்பர் புக்' என, அழைக்கப்படும் இதன், முதல் பக்கத்தில், என்னென்ன உள்ளடக்கம் வைக்கப்பட்டுள்ளது என்பதை குறிக்க வேண்டும். பதில் மனுக்கள், ஆவணங்கள் தாக்கல் செய்யும் போது, அதற்கு தொடர் எண்கள் இடப்பட்டு, "பேப்பர் புக்' உடன் சேர்த்து வைக்க வேண்டும்.பொது நல மனு தாக்கல் செய்பவர்கள், கோர்ட் அனுமதி பெறாமல், அந்த மனுவை, வாபஸ் பெற உரிமையில்லை. 

மனுவில் கூறியுள்ள முகாந்திரங்களின் அடிப்படையில், கோரப்பட்ட நிவாரணம் தவிர, வழக்கு விசாரணையின் போது, புதிய முகாந்திரங்களை எழுப்பவோ, புதிய நிவாரணம் கோரவோ முடியாது; ஆனால், கோர்ட் அனுமதித்தால், கோரிக்கை மற்றும் முகாந்திரத்தில், திருத்தம் செய்யலாம்.

முதல் கட்டமாக, சென்னை ஐகோர்ட், மதுரை கிளையில், ஜூன், 3ம் தேதி முதல், "பிளாட் பைலிங் சிஸ்டம்' அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்பீல் வழக்கைப் பொறுத்தவரை, முதல் கட்டமாக இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதன் பின், படிப்படியாக, மற்ற வழக்குகளைப் பொறுத்தும், இந்த முறை அமல்படுத்தப்படும்.


No comments:

Post a Comment

Disclaimer


This Blog Spot is meant for publishing important announcements and intimations from the Pondicherry Bar Association as we collected from the renowned Dailies, Magazines, etc., so as to create an awareness to the general public and also to keep it as a ready reckoner by them. As such the readers may extend their gratitude towards the Original Author as we quoted at the bottom of each Post under the title "Courtesy". Furthermore, the Blog Author is no way responsible for the correctness of the materials published herein since the information furnished herein are of informative in nature and the readers may verify the concerned valuable sources.



Court Verdict Published in Dailies

Enactments passed by Law Makers

Right to Information Act, 2005

Right to Education Act, 2009

Slideshow

Photo Album of Tamil Nadu National Law School

Labels

2-day Boycott (2) 2008 (1) 2010 (1) 2012 (2) 2013 (4) 2014 (10) 2014-2016 (1) 2015 (4) 2016 (1) 2016-18 (1) 2017 (2) 2018 (5) 365-Day Work Scheme (1) 4-day Boycott (1) 6-day stir protest (1) 7-days Boycott (1) Aadal Paadal (1) Abdul Kalam (1) Abolished (1) Acting CJ (1) Advocate (10) Advocate K.Palani (1) Advocate-on-Record (1) Advocates' Welfare Fund Act (2) AIBE (1) Alumni Meet (1) Ambedkar Law College (1) Amendment (1) Announcements (3) AP encounter issue (1) Appointments (1) Article (3) Assault on Woman magistrate (1) Bank (1) Bar Council of India (7) Bar Council of Tamil Nadu (4) BCI (1) Bench and Bar (1) Bombay High Court (1) Boycott Courts (12) Brutal killing (1) Calendar (2) Calendar 2015 (1) Cauvery issue (1) Certificate and Place of Practice (Verification) Rules (2) Cheques (2) Chief Minister (3) Chitta and Adangal (1) CHOGM (2) Circulars (2) Civil Judge Recruitment (1) CJI (4) Common facilities Block (2) Commonwealth Summit (1) Contempt (1) Copy Applications (1) Court Building (1) Court Procedures (1) Criminal Law Bill (1) CTC (1) CTS-2010 cheques (2) Cyril Mathias Vincent (1) Declaration Form (1) Demise (3) Designation (1) Dinakaran (3) Dinamalar (7) Dispensary (1) Doordarshan (1) Education Department (1) Election (7) Erode Federation (3) Examinations (2) Family Court (1) Family Court Judge (1) FIR (1) Flat Filing System (1) Folding case bundles (1) Former Presidents (1) French Regime (1) Fundamental Rights (1) Gazette (2) General Body Meeting (2) Genocide (1) Gowns (1) Health check-up (1) High Courts (1) Hon’ble Mr. Justice G. Rajasuria (1) How to Register Documents (1) III ADM Court (1) Indian Kanoon (1) Integrated Court Complex (1) International Women's Day (1) Invitation (3) Isvarane.S (1) JM-III (1) Judges (3) Judicial Appointment Commission (1) K.Kothandapani (2) Kolam contest (1) Kumaran Advocate (1) Land (1) Law College (1) Law Commission (1) Law Day (1) Law Department (3) Law Minister (1) Law Museum (1) Legal Services Authority (1) Lieutenant Governor (1) Live Programme (1) Lok Adalat (1) Madras High Court (28) Mahe Courts (1) Maruthu Pandiyan (2) National Judicial Appointment Commission (1) National Legal Counsel Day (1) Nationwide Strike (2) New Year Greetings Card (1) Newly Sanctioned Court (2) Non-CTS-2010 cheques (2) Norms (1) Notifications (5) November 26 (1) Office Bearers (4) Official Court Language (1) Old Court Building (1) One Bar-One Vote (1) Online (1) P.Selvam Advocate Birthday (1) Patta (1) Police Station Jurisdictions (2) Pondicherry (20) Pondicherry Bar Association (8) Pondicherry Courts (2) Pondicherry Magistrate Courts (2) Pondicherry Residents (1) Pondicherry University (1) POSCO Act (1) Post Office (1) Power of Attorney (1) President of India (1) Presidents (1) Principal District Judge (1) Puducherry Advocate (5) Puducherry Code (1) Puducherry Judicial Officers (7) Puducherry Judicial Services (1) R.M.Lodha (1) R.Mugundhan Advocate (1) Rates of Fees and Honoraria (1) RBI (2) Recruitment Rules (2) Registration (1) Rename (1) Renovation (1) Retired Staffs (1) Revenue Department (1) Right to Sleep (1) Satta Padhukappu (1) Selection of Judges (1) Senior Advocate (2) Sri Lanka (2) supreme court (6) Supreme Court of India (6) Tamil (1) Tamil Nadu (1) Tamil Nadu State Judicial Academy (2) THE HINDU (6) Third Floor (1) Times of India (1) Transfers (1) Transfers and Appointments (7) Udaya Baskar (1) UTPLSA (3) Vacation and Holidays (2) Vacation Courts (1) Video (2) Vinoba Advocate (1) Webindia (1) Websites (1) Youtube (2) தி இந்து (1) தூக்கம் (1) தேசிய சட்ட ஆலோசனைகள் தினம் (1)